முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

வீரவநல்லூரில் முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

வீரவநல்லூரில் உள்ள முப்பிடாதி அம்மன் என்ற கடையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 13-ந் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடர்ந்து ஹோமம், கோ பூஜை, புனித நீர் எடுத்து வருதல், யாகசாலை பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் போன்றவை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவி்ல் திருப்பணிக்குழு நிர்வாகிகள், சமுதாய தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story