அக்னிவீரன் கோவில் குடமுழுக்கு


அக்னிவீரன் கோவில் குடமுழுக்கு
x

அக்னிவீரன் கோவில் குடமுழுக்கு நடந்தது.

தஞ்சாவூர்

மதுக்கூர் அருகே தளிக்கோட்டை கிராமத்தில் உள்ள அக்னிவீரன் கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி அக்னி வீரன் மற்றும் பரிவார சன்னதிகளில் திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து நேற்று குடமுழுக்கு நடந்தது. இதில் தளிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story