தர்மபுரி குமாரசாமிப்பேட்டைசிவசுப்பிரமணிய சாமி கோவிலில் ரூ.3.28 லட்சம் உண்டியல் காணிக்கை
தர்மபுரி
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச திருவிழா முடிந்த பின்னர் ஆண்டுதோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று கோவில் வளாகத்தில் இந்த ஆண்டுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சங்கர், கோவில் செயல் அலுவலர் ராதாமணி ஆகியோர் இந்த பணிகளை பார்வையற்றனர். பலத்த பாதுகாப்புடன் இந்தப் பணி வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. கோவில் பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முடிவில் ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 558 மற்றும் சில்லறை காசுகள் இருந்தது. மேலும் 12 கிராம் தங்கமும், 200 கிராம் வெள்ளியும் இருந்தது. இவை அனைத்தும் முறையாக கணக்கில் வரவு வைக்கப்பட்டு, கோவில் வங்கி கணக்கில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story