தர்மபுரி குமாரசாமிப்பேட்டைஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 108 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. பின்னர் அம்மன் வரலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர அம்மன் குபேர லட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனை தொடர்ந்து கணபதி பூஜை, வரலட்சுமி பூஜையும், 108 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜையும் நடந்தது. பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை 24 மணி தெலுங்கு செட்டியார் சமூகத்தினர், மகளிர் அணியினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.