தண்டவாளத்தில் மது அருந்திய வாலிபர் ரெயில் மோதி பலி


தண்டவாளத்தில் மது அருந்திய வாலிபர் ரெயில் மோதி பலி
x

ராசிபுரத்தில் தண்டவாளத்தில் மது அருந்திய வாலிபர் ரெயில் மோதி இறந்தார்.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் புது காலனி பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் மகன் தனுஷ் குமார் (20). இவர் சம்பவத்தன்று ராசிபுரம் சேலம் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு போதை அதிகமானதால் ரெயில்

தண்டவாளத்திலேயே அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த தனுஷ் குமார் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்தார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தனுஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story