கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2023 12:30 AM IST (Updated: 1 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சாமி மகன் செல்வருத்ரன் (வயது 26). இவர் புளியங்குடி அருகே முள்ளிக்குளம் அரசு பள்ளி அருகில் நின்று கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து புளியங்குடி குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று செல்வருத்ரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story