'மற்ற மாநிலங்களை காட்டிலும் உயர்கல்வி கற்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது'-வழிகாட்டி நிகழ்ச்சியில் கலெக்டர் பேச்சு


மற்ற மாநிலங்களை காட்டிலும் உயர்கல்வி கற்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது-வழிகாட்டி நிகழ்ச்சியில் கலெக்டர் பேச்சு
x

மற்ற மாநிலங்களை காட்டிலும் உயர்கல்வி கற்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று வழிகாட்டி நிகழ்ச்சியில் கலெக்டர் கூறினார்.

சிவகங்கை

மற்ற மாநிலங்களை காட்டிலும் உயர்கல்வி கற்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று வழிகாட்டி நிகழ்ச்சியில் கலெக்டர் கூறினார்.

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்ட பள்ளிகல்வித்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் ஆகிய துறைகள் சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கான வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டு கலெக்டர் பேசியதாவது:-

தமிழகம் சிறந்து விளங்குகிறது

தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்று, உயர்கல்வியில் சேருவதற்கு தயாராக உள்ள மாணவர்களுக்கான கல்லூரி கனவு என்னும் வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்டந்தோறும் தற்போது நடைபெற்று வருகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், மேற்படிப்பு மற்றும் உயர்படிப்பு படிப்பதில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது.

எந்தப்பிரிவைச் சார்ந்த படிப்பை நாம் படித்தால் நமது வாழ்க்கையில் முன்னேற்றம் காணமுடியும் என்பதையும், வாழ்க்கைக்கு அடித்தளமானது படிப்புதான் என்பதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பிளஸ்-2 படிப்புடன் நிறுத்திவிடாமல் மேற்கொண்டு எந்த படிப்பை படிக்கவேண்டும் என்பதை தெளிவாக அறிந்து படிக்க வேண்டும். மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக படிப்பை தேர்வு செய்ய கூடாது. பல்வேறு படிப்புக்கள் குறித்தும் வங்கிகளில் கல்விக்கடன் பெறும் முறைகள் குறித்தும். உயர்கல்வி உதவித்தொகை பெறுவது குறித்தும், கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி), இந்திய வருவாய் பணி அதிகாரி நந்தக்குமார், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட கல்வி அலுவலர்கள் முத்துச்சாமி (சிவகங்கை), சண்முகநாதன் (தேவகோட்டை), பாலதிரிபுரசுந்தரி (திருப்பத்தூர்), சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை சாம்பவிகா பள்ளி செயலர் சேகர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் .மணிமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு பிளஸ்-2-க்கு பிறகு எந்ததெந்த படிப்புக்களை படிக்கலாம் என்று வல்லுனர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story