தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு ஊர்வலம்


தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு ஊர்வலம்
x

தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பத்தூரில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாதிரிப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி கொடயசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் 750 பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் நடந்து சென்றார். ஊர்வலம் பஸ் நிலையம் வழியாக கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

அங்கு தமிழ்நாடு நாள் முக்கியத்துவத்தை அறியும் வகையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புகைப்பட கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியினை ஏராளமான பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.

பரிசுத்தொகை

அதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பேசினார்.

அப்போது கலெக்டர் பேசுகையில், இலக்கிய இலக்கணம் வளமுடைய மொழி என்றால் அது தமிழ் மொழி தான். சிந்து சமவெளி நாகரிகத்தின் முன்னோர்கள் திராவிடர்கள் என்று பல அறிஞர்கள் கூறி வருகிறார்கள்.

தமிழர்கள் மிகச்சிறந்த கல்வியை பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி பல அரசனுக்கு அறிவுரை சொன்ன பெண் புலவர்கள் இருந்திருக்கிறார்கள்.

இதில் இருந்து பெண் கல்வி எந்த அளவுக்கு சிறந்த இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. கல்வியும் பெண்களையும் சிறந்து இருக்கிற சமுதாயம் எதுவென்றால் அது தமிழ் சமூகம் தான்.

எனவே தமிழனின் பெருமையை காப்போம். தமிழ் மொழியை எங்கிருந்தாலும் நாம் பேசுவோம் என்று சொல்ல வைத்து, இந்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் சீரும், சிறப்புமாக கொண்டாட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்பராயன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவி, அமுதா, ஜெயகாந்தன், தாசில்தார் சிவப்பிரகாசம், பள்ளி கல்வி துணை ஆய்வாளர்கள் தாமோதரன், தனராஜ் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story