தமிழ் கனவு நிகழ்ச்சி


தமிழ் கனவு நிகழ்ச்சி
x

சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் பண்பாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழர்களின் தொன்மையான நாகரிகம், வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். அதன்படி நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 2 நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் தற்போது 3-வதாக இங்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது. தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது. பண்பாட்டையும், நாகரிகத்தையும் இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு கல்லூரி மாணவர்கள் உணர்த்துவது என்பது ஆரோக்கியமான எதிர்கால சமூக கட்டமைப்பின் முக்கிய பங்காகும்' என்றார்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலசந்திரன், ஊடகவியலாளர் கார்த்திகைசெல்வன் ஆகியோரும் பேசினர். தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறந்த வினாக்கள் எழுப்பிய மாணவர்களுக்கு பெருமிதச்செல்வி, பெருமிதச்செல்வன் எனும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரி பொதுமேலாளர் தம்பித்துரை, பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சவுந்திர மகாதேவன், தாசில்தார் செல்வம் மற்றும் மாணவ-மாணவிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story