மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்


மேல்மலையனூர்  அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
x

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினம் செய்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை தோறும், ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அதன்படி வைகாசி மாதத்திற்கானஅமாவாசை விழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

பின்னர், உற்சவ அம்மன் வலது கரங்களில் உடுக்கை, கத்தியும் இடது கரங்களில் சூலம், கபாலமும், இடது கரத்தில் உள்ள கண்ணாடியைப் பார்த்து தலைமுடியை அலங்கரிப்பது போலவும், கால் மீது கால் போட்டு அமர்ந்திருப்பது போலவும் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

ஊஞ்சல் உற்சவம்

இரவு 11 மணிக்கு உற்சவ அம்மன், ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினார். பின்னர், பூசாரிகள் பக்திப் பாடல்கள் பாடியவுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்த அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இரவு 12 மணிக்கு தலாட்டுப்பாடல்கள் பாடி அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்து மகா தீபாரதனை நடந்து, ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

சிறப்பு பஸ்கள்

விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி,

தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி, ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு மற்றும் கோவில் பணியாளர்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசாரும் செய்திருந்தனர்.


Next Story