சிங்காரப்பேட்டை அருகேஇளம்பெண் தீக்குளித்து தற்கொலை


சிங்காரப்பேட்டை அருகேஇளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 2 Jun 2023 12:30 AM IST (Updated: 2 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

சிங்காரப்பேட்டை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு

சிங்காரப்பேட்டை அருகே உள்ள சென்னூரை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி நிவேதா (வயது 23). இவர்களுக்கு கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நிவேதா கடந்த 25-ந் தேதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிவேதா இறந்தார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும திருமணமான 4½ ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்தீபன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story