தூத்துக்குடியில் திடீர் மழை
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை திடீரென மழை பெய்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை வெயில் முடிவடைந்தாலும், வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வந்தது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது பலத்த காற்று வீசியது. லேசான மேகமூட்டமாகவும் காணப்பட்டன. நேற்று காலையில் வெயில் மக்களை வாட்டியது. மதியத்துக்கு பிறகு திடீரென மேகம் திரண்டு வந்தன. மதியம் 2.45 மணி முதல் திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்கள் இந்த மழை நீடித்தது. தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் பெய்த இந்த மழையால் சாலையில் ஆங்காங்கே லேசான தண்ணீர் தேங்கி கிடந்தது. இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story