காணை அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் சாவு கோட்டாட்சியர் விசாரணை


காணை அருகே    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் சாவு    கோட்டாட்சியர் விசாரணை
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

காணை அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கர்ப்பிணி திடீரென உயிரிழந்தார்.

விழுப்புரம்

காணை,

காணை அருகே உள்ள ஒருகோடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி ஷான்மதி(வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. அதர்வா(1) என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த ஷான்மதி மூச்சுத்திணறல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு சிக்கன் ரைஸ், பிளாக்பாரஸ்ட் கேக் சாப்பிட்டு தூங்கிய அவர் நேற்று காலை மூக்கிலும், வாயிலும் நுரைதள்ளியவாறு மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், ஷான்மதியை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஷான்மதியின் சாவுக்கான காரணம் தெரியவில்லை?

இதுகுறித்து ஷான்மதியின் தாய் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஷான்மதியின் சாவு குறித்து விழுப்புரம் கோட்டாட்சியர் விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.


Next Story