படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள்


படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள்
x

முசிறியில் பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர். எனவே பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி

முசிறியில் பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர். எனவே பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படிக்கட்டுகளில் பயணம்

முசிறியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் முசிறி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் பள்ளி தொடங்கும் மற்றும் விடும் நேரங்களான காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் அளவுக்கு அதிகமான கூட்டம் காணப்படுகிறது.

இதனால் மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யும் நிலை உள்ளது. மாணவர்கள் புத்தகப்பையை தூக்கிக்கொண்டு மிகவும் சிரமத்துடன் பயணம் செய்து வருகின்றனர். அந்த புத்தக பையில் சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் உரசி சென்றால் படியில் பயணம் செய்பவர்களின் நிலை என்னவாகும் என நினைத்து பார்த்தாலே பதறுகிறது. படியில் பயணம் செய்தால் நொடியில் மரணம் ஏற்படும் என்று பள்ளிகளுக்கே சென்று போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.

கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

அதுமட்டுமின்றி பள்ளி பாடவேளைகளில் ஆசிரியர்களும் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஆனால் மாணவர்கள் இதுபற்றி கூறும்போது, பள்ளி நேரங்களில் ஒருசில பஸ்களே இயக்கப்படுகிறது. அந்த பஸ்சை விட்டால் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வேறு வழியின்றி பஸ்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றனர்.


Next Story