மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்


மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
x

மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சி மொழி வார விழா நேற்று தொடங்கியது. இந்தவிழா ஒரு வாரம் நடைபெற உள்ளது. இதையொட்டி, காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையம் அருகே பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து அரசு வாகனங்களில் ஆட்சி மொழி விழிப்புணர்வு நோட்டீசை ஒட்டி, துண்டு பிரசுரத்தை வணிக நிறுவனங்களுக்கு வழங்கினார். இந்த ஊர்வலம் மேலரண் சாலை வழியாக சென்று தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் முடிவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மேலும், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை அமைப்பது தொடர்பான துண்டு பிரசுரங்களை அனைத்து கடைகளுக்கும் வழங்கினர். இதில், பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள், மூத்த தமிழ் அறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story