மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்பு
நத்தம் என்..பி.ஆர். செவிலியர் கல்லூரியில் மாணவ-மாணவிகள் உறுதிெமாழி ஏற்றுக்கொண்டனர்.
திண்டுக்கல்
நத்தம் என்.பி.ஆர்.செவிலியர் கல்லூரியில் விளக்கு ஏற்றும் விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் அன்னலெட்சுமி தலைமை தாங்கினார். முதலாமாண்டு மாணவி சுபிக்சா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஈரோடு ஜீவிதம் பவுண்டேஷன் தலைவர் மனிஷா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் செவிலியர் பணியில் நோயாளிகளோடு கனிவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் உடல்நலத்தோடு, மன நலத்தையும் சேவை மனப்பான்மையோடு மேம்படுத்த வேண்டும். சிறப்பாக படித்து பயிற்சி முடிப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள், ராணுவ வேலை, வெளிநாடுகளில் என பல்வேறு வேலை வாய்ப்பு உள்ளது என கூறினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் அனைவரும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் படத்திற்கு முன்பு விளக்கேற்றி உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். முடிவில் மாணவர் ராஜ்கமல் நன்றி தெரிவித்தார்.
Related Tags :
Next Story