காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதூர் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் காட்டன் சூதாட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. ஏனெனில் பொதுமக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை வீணாக்க அனுமதிக்க மாட்டோம். காட்டன் சூதாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Related Tags :
Next Story