மத்திய அரசுக்கு எதிராக தெருமுனை பிரசார கூட்டம்
மத்திய அரசுக்கு எதிராக தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே சட்டம், ஒரே மதம் ஒரே மொழி, ஒரே வரி ஒரே தேர்தல் என்ற பாசிச கொள்கையை எதிர்த்து தெருமுனை பிரசாரம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்றது. இதற்கு கந்தசாமி தலைமை தாங்கினார். இதில், மாநில செயலாளர் குணாளன், மாநில குழு உறுப்பினர் சிதம்பரம் சுந்தரவிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மக்கள் கலை மன்ற பாடகர் குணசேகரன் புரட்சிகர பாடல்களை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story