தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரக்கொலை


தலையில் கல்லைப்போட்டு  தொழிலாளி கொடூரக்கொலை
x

வீரவநல்லூர் அருகே தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மற்றொரு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் அருகே தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மற்றொரு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

தென்காசி மலையான் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 50). செங்கோட்டையை அடுத்த வல்லத்தை சேர்ந்தவர் ஞானமுத்து (48). கூலி தொழிலாளிகளான இவர்கள் மேலும் சிலருடன் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள தெற்கு வீரவநல்லூர் ரெட்டியார்புரம் 80 அடி கால்வாய் அருகில் உள்ள ஒரு தோட்டத்துக்கு மாங்காய் பறிப்பதற்கு நேற்று முன்தினம் வந்தனர்.

வேலை முடிந்ததும் இரவில் கருப்பசாமி, ஞானமுத்து ஆகிய இருவரும் அங்கு மது குடித்து உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, ஞானமுத்துவை தாக்கியதாக கூறப்படுகிறது.

தலையில் கல்லைப்போட்டு...

அதன்பிறகு அவர்கள் தூங்க சென்று விட்டனர். இந்த நிலையில் இரவில் ஞானமுத்து எழுந்து, அங்கு தூங்கி கொண்டிருந்த கருப்பசாமியின் தலை மீது கல்லை தூக்கி போட்டார். இதில் கருப்பசாமி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் கருப்பசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஞானமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி ஒருவர் சக தொழிலாளியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story