எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தி தமிழக சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டதை கண்டித்தும், இந்த சட்ட திருத்த முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் ஆரிப் பாட்ஷா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கல்வத், செயற்குழு உறுப்பினர்கள் சிந்தா, காஜா, தங்கள் மைதீன், அசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா, எஸ்.டி.டி.யு. மண்டல தலைவர் ஹைதர் இமாம் ஆகியோர் பேசினர். இதில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் செய்யது மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story