நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
முகமது நபியை இழிவுபடுத்தி பேசியதாக சர்ச்சைக்குள்ளான நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வேண்டும், மத்திய பா.ஜனதா அரசு பதவி விலக வேண்டும், உத்தரபிரதேசத்தில் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்படுவதை அந்த மாநில அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதியம் நாகர்கோவில் நகரின் முக்கிய பள்ளிவாசல்களில் தொழுகை முடிந்த பிறகு பள்ளிவாசல்கள் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு அருகில் உள்ள பள்ளிவாசல் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் காஜாமைதீன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.