சிலுவை பாதை ஊர்வலம்
சிலுவை பாதை ஊர்வலம்
கோத்தகிரி
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு கோத்தகிரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.
டான்போஸ்கோ மலையில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை கோத்தகிரி ஆரோக்கிய மாதா ஆலய பங்கு தந்தை ஞானதாஸ் தொடக்கி வைத்தார். பங்கு தந்தை உள்பட ஒவ்வொருவராக சிலுவையை மாறி, மாறி சுமந்து முன்னே செல்ல நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின் தொடர்ந்து சென்றனர். சிலுவை பாதை ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியில் பஸ் நிலையம் அருகே உள்ள ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் நிறைவு பெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடியபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர். பின்னர் ஆலயத்தில் பங்கு தந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.