தேனியில் மாநில செஸ் போட்டிகள்


தேனியில் மாநில செஸ் போட்டிகள்
x

தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் உலக செஸ் தினத்தையொட்டி மாநில அளவிலான செஸ் போட்டிகள் நடந்தன

தேனி

தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் உலக செஸ் தினத்தையொட்டி மாநில அளவிலான செஸ் போட்டிகள் நடந்தன. வயது வாரியாக 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை, சென்னை உள்பட 12 மாவட்டங்களை சேர்ந்த 100 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் செஸ் விளையாடி அவர்களை ஊக்கப்படுத்தினார். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும், 4 பேருக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி தலைவர் சையது மைதீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story