புனித அந்தோணியார் ஆலய திருவிழா


புனித அந்தோணியார் ஆலய திருவிழா
x
தினத்தந்தி 27 Jun 2023 1:15 AM IST (Updated: 27 Jun 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடந்தது.

நீலகிரி


குன்னூர்


குன்னூர் அருகே பேரக்ஸ் சின்ன வண்டிசோலை கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. பழமை வாய்ந்த இந்த ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஜூன் மாதம் நடைபெற்று வருகிறது. இதேபோல் நடப்பாண்டில் 119-வது ஆண்டு திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நவநாள் திருப்பலியுடன் சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நடைபெற்றது. ஆலய பங்கு தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் சிறப்பு திருப்பலியுடன் ஆராதனை நடைபெற்றது. பின்னர் ஆலயத்தில் இருந்து தேர் பவனி எம்.ஆர்.சி. வழியாக ராணுவ ஆஸ்பத்திரி வரை சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து பஜனை சங்கத்தாரின் ஜெபம் மற்றும் புனிதர்களின் பக்தி பாடல்கள் இடம் பெற்றன. திருவிழாவையொட்டி அன்னதானம், வானவேடிக்கை நடைபெற்றது.



Next Story