ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி


ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
x

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 30, மாணவிகள் 46 என தேர்வு எழுதிய 76 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் திவ்ய ஸ்ரீ, பார்கவி, முகமது ரிஸ்வான், ஸ்ரீவர்ஷினி, கயல்விழி, கோபிகா ஸ்ரீ ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, பள்ளியின் சி.இ.ஓ. காவியா, பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் அபிராம சுந்தரி ஆகியோர் பாராட்டி இனிப்புகள் வழங்கினர்.


Next Story