செல்லியம்மன் கோவிலில் சாமுண்டி யாகம்


செல்லியம்மன் கோவிலில் சாமுண்டி யாகம்
x
தினத்தந்தி 6 July 2023 12:45 AM IST (Updated: 6 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

செல்லியம்மன் கோவிலில் சாமுண்டி யாகம் நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத பவுர்ணமியையொட்டி அருள்வாக்கு சித்தர் கலிதீர்த்தான் மற்றும் சிவச்சாரியார்கள் அம்மனுக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து சாமுண்டி யாகம் வளர்த்தனர். அதனை தொடர்ந்து புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.


Next Story