அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கீழத்தெருவில் பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் ஏழைகாத்த அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு பக்தர்கள் வளையல் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்ட வளையல்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர். இதே போல் தென்பாதி மகா மாரியம்மன் கோவில், சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில், சட்டநாதபுரம் சந்தன மாரியம்மன் கோவில், சீர்காழி கோமளவல்லி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story