ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கிணத்துக்கடவு
ஆடி அமாவாசை முன்னிட்டு கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது.அதனை தொடர்ந்து சூலக்கல் மாரியம்மனுக்கு பால், தேன், பன்னீர், எலுமிச்சை, இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு அலங்காரம் நடைபெற்றது.சுதந்திர தினம் அன்று ஆடி அமாவாசை வந்ததால் சூலக்கல் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆரஞ்சு, சிகப்பு, வெள்ளை, பச்சை ஆகிய நான்கு நிறங்களில் மலர், மாலைகளுடன் விபூதி அலங்காரத்தில் சிங்க வாகனத்தில் அமர்ந்திருப்பது போல் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று ஆடி அமாவாசை என்பதால் சூலக்கல் மாரியம்மனை தரிசனம் செய்ய கோவை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கேரளா மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். மாரியம்மனை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர்.அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைசூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கந்தசாமி செய்திருந்தார். பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் வடக்கி பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதேபோல் கிணத்துக்கடவில் உள்ள பிளேக்மாரியம்மன், கரியகாளியம்மன், சிவலோக நாயகியம்மன் ஆகிய கோவில்களிலும் ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.