மாக்கினாம்பட்டி ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு


மாக்கினாம்பட்டி ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 6 March 2023 12:15 AM IST (Updated: 6 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாக்கினாம்பட்டி ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி கந்தவேல் நகரில் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அய்யா வைகுண்டரின் 191-வது அவதார திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 12 மணிக்கு சாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, அன்னாசி உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களால் படைக்கப்பட்டு சிறப்பு பூஜையுடன், உச்சிப்படிப்பு நடைபெற்றது. இதை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மேலும் மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு மற்றும் உகப்படிப்பு வாசிக்கப்பட்டு பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story