ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
பூராட நட்சத்திரத்தை முன்னிட்டு ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
மயிலாடுதுறை
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே ஆக்கூரில் உள்ள வாள்நெடுங்கண்ணி அம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. சோழ மன்னர்களில் ஒருவரும் 63, நாயன்மார்களில் ஒருவரான கோச் செங்கட் சோழ மன்னரால் அமைக்கப்பட்ட மாடக் கோவில்களில் ஒன்றான இந்த கோவில் சுவாமி தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் பூராட நட்சத்திரத்தை முன்னிட்டு தான்தோன்றீஸ்வரர், நெடுங்கண்ணி அம்மன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story