சின்னக்குமாரருக்கு சிறப்பு பூஜை
பழனி முருகன் கோவிலில் சின்னக்குமாரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
திண்டுக்கல்
பழனி முருகன் கோவில் உற்சவரான சின்னக்குமாரருக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் சிறப்பு பூஜை, கலாகர்ஷணம், ஜடிபந்தனம் ஆகியவை நடைபெற்றது. நேற்று காலை 10.30 மணிக்கு சின்னக்குமாரருக்கு கலசாபிஷேகம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து மீண்டும் சின்னக்குமாரர் சிலை கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் உச்சிக்கால பூஜைக்கு பிறகு உற்சவருக்கு உபய அபிஷேகங்கள் நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை கோவில் பட்டத்துக்குருக்கள் அமிர்தலிங்கம், செல்வ சுப்பிரமணி மற்றும் குருக்கள்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன், சாய் கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் சுப்புராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story