கோவில்களில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தை மாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அதன்படி கிருஷ்ணகிரி புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள நவநீத வேணுகோபால சாமி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை, ஹோமம் நடந்தது. தொடர்ந்து ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ருக்மணி, சத்யபாமா சமேதராய் கிருஷ்ணன் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
சித்தி விநாயகர் கோவில்
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சாமிக்கு பொங்கல் வைத்து படைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.