அரூர் வாணீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை


அரூர் வாணீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சனி பிரதோஷத்தையொட்டி அரூர் வாணீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

தர்மபுரி

அரூர்:

அரூர் கடைவீதியில் உள்ள வாணீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நந்திக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சாமி சிறப்பு அங்காரத்தில் கோவில் வளாகத்திலேயே எடுத்து வரப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story