ஓசூர் சோமேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை


ஓசூர் சோமேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நவராத்திரியையொட்டி ஓசூர் சோமேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் நெசவு தெருவில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில் நவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 9 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், மகாதீபாராதனை நடைபெற்றது. நவராத்திரி நிறைவுநாளையொட்டி கோவிலில் சோமேஸ்வரர், அம்மன், விநாயகர், முருகர் ஆகிய சாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோவில் வளாகத்தில் இருந்து உற்சவர் விநாயகர் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில், வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story