பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி 2-வது சனிக்கிழமை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்கும் பக்தர்கள் விரதம் இருப்பது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணகிரி கணவாய்ப்பட்டி வெங்கட்ரமணசாமி கோவிலில் அதிகாலை முதலே சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள பெருமாள் கோவில் பொன்மலை சீனிவாச பெருமாள், பாளேகுளி அனுமந்தராய சாமி, கிருஷ்ணகிரி மலையப்ப சீனிவாச பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நேர்த்திக்கடன்
கிருஷ்ணகிரி தம்மண்ண நகர் வெங்கடேச பெருமாள், கிருஷ்ணா கோவில் தெரு நவநீத வேணுகோபாலசாமி, பழையபேட்டை லட்சுமி நாராயணசாமி கோவில், பாப்பாரப்பட்டி வேணுகோபால் சாமி கோவில் உள்பட நகரில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி அதிகாலையிலேயே சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதே போல கணவாய்ப்பட்டி பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
அன்னதானம்
இதேபோன்று ராயக்கோட்டை, கெலமங்கலம், பர்கூர், ஓசூர், சூளகிரி, காவேரிப்பட்டணம், மத்திகிரி, ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.