பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 10 July 2022 10:24 AM IST (Updated: 10 July 2022 10:25 AM IST)
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம்,

இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அதன்படி உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தும் உன்னத பண்டிகையை நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

நாகூர் தர்காவில் நடைபெற்ற தொழுகைக்கு பின்னர் புத்தாடை அணிந்த இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல நாகை மாவட்டத்தில் நாகூர், நாகை, திட்டச்சேரி, வடகரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 66 பள்ளி வாசல்களிலும் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.


Next Story