முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


நாமக்கல் மாவட்டத்தில் கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நாமக்கல்

சிறப்பு பூஜை

பரமத்திவேலூர் வட்டாரத்தில் புரட்டாசி மாத கிருத்திகையையொட்டி கபிலர்மலையில் உள்ள ‌பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில்‌ உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை‌ முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், பிலிக்கல்பாளையம் ‌விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள ‌சுப்ரமணியர், ராஜா சாமி கோவிலில் உள்ள ராஜா சாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன் மற்றும் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காந்தமலை முருகன்

அதேபோல் மோகனூர் காந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகையையொட்டி சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story