முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

நீலகிரி

கூடலூர்,

ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

ஆடி கிருத்திகை

ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதேபோல் ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரம் விசேஷமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நேற்று ஆடி கிருத்திகையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கூடலூர் குசுமகிரி முருகன் கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்ந்து காலை 11 மணிக்கு பால், பஞ்சாமிர்த அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கூடலூர் 1-ம் மைல் சக்தி முருகன், சூண்டி திருக்கல்யாண மலை முருகன், சந்தன மலை உள்பட முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் கூடலூர் சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள சன்னிதானத்தில் முருகப்பெருமானுக்கு மகா அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜை

ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. காலை முதல் சிறப்பு பூஜை நடந்தது. இதில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் படிக்கட்டுகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மேலும் கோவில் வளாகத்தில் மலேசியாவில் உள்ளதை போல் 40 அடி உயரத்தில் முருகன் சிலை உள்ளது. அதன் முன்பு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் ஊட்டி அருகே கீழ் அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.


Next Story