ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை


ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை
x

திருப்பத்தூர் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கோட்டை தெருவில் உள்ள தர்மவீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து பத்தாயிரம் வடைமாலையால் அலங்காரம் செய்யப்பட்டது. வண்ண மலர்களால் மூலவருக்கு அலங்கரித்து மகாதீபாராதனை நடைபெற்றது. ஆஞ்சநேயர் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் சேவையில் காட்சியளித்தார். இதனை தொடர்ந்து தர்மவீர ஆஞ்சநேயர் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழி நெடுகிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் டாக்டர் லீலா சுப்ரமணியம் செய்திருந்தார். இதேபோல திருப்பத்தூர் நகைக்கடை பஜாரில் உள்ள சுந்தரவீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story