விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது.
திருவாரூர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள ராமநாதபுரம், ராமநாதசாமி கோவிலில் தனி சன்னதியில் உள்ள பாலவிநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது. இதில் பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்டவற்றால் பாலவிநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், வேளுக்குடி அச்சம் தீர்த்த விநாயகர், புனவாசல் மழுப்பெருத்த விநாயகர், உச்சுவாடி நர்த்தன விநாயகர், லெட்சுமாங்குடி கலிதீர்த்த ராஜ விநாயகர் உள்ளிட்ட கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story