பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம்இன்று நடக்கிறது
பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம்இன்று நடக்கிறது
பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம்இன்று நடக்கிறது
பொது வினியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் வழங்கும்பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல், குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொது வினியோக திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம்.
அதைத்தவிர வேலூர் தாலுகாவில் பாலமதி, காட்பாடி தாலுகாவில் கீரைசாத்து, அணைக்கட்டு தாலுகாவில் ஆசனாம்பட்டு, குடியாத்தம் தாலுகாவில் அக்ராவரம், கே.வி.குப்பம் தாலுகாவில் வேப்பங்கனேரி, பேரணாம்பட்டு தாலுகாவில் மசிகம் மதுரா, மிட்டப்பள்ளி ஆகிய கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆவணங்களின் நகலை கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து வழங்கி பயன்பெறலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.