ஆயிலம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்
ஆயிலம் கிராமத்தில் 3 ஊர்களுக்கான சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடந்தது.
ஆற்காடு
ஆயிலம் கிராமத்தில் 3 ஊர்களுக்கான சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடந்தது.
ஆற்காட்டை அடுத்த ஆயிலம், அருங்குன்றம், சாம்பசிவபுரம் ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் ஆயிலம் கிராமத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வாலாஜா தாசில்தார் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், ஆயிலம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதி ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலால் ஆணையர் சத்திய பிரசாத், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் தாரகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களில் தகுதி வாய்ந்ததாக தேர்வு செய்யப்பட்ட 140 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு, விவசாய இடுபொருட்கள் ஆகியவற்றை வழங்கி பேசினர்.
.இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஸ்வநாதன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.