சிறப்பு கிராம சபை கூட்டம்
நாலாட்டின்புத்தூர் அருகே வானரமுட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள வானரமுட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வானரமுட்டி பஞ்சாயத்து தலைவர் இசக்கியம்மாள் தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து கிளார்க் விஜி வரவேற்றார். கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மாரியப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சங்கிலியம்மாள், முத்துமாலை, சுப்பாராஜ், கனகலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story