வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
திருப்பத்தூர்
வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்குவதற்காகவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story