மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
கரூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு முகாம் கரூர் மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த முகாம் புதுக்கநல்லி சமுதாயக்கூடம், ஆண்டாங்கோவில் புதூர் மந்தை, சின்ன கொங்குதிருமண மண்டபம், விவிஜி நகர், சாய்பாபா கோவில் அருகில், ஜவகர்பஜார், தாலுகா அலுவலகம் அருகில், செங்குந்தபுரம், டெல்லி ஸ்வீட்ஸ் அருகில், கணபதிபாளையம், பகவதி அம்மன் கோவில், மின்னாம்பள்ளி பஞ்சாயத்து அலுவலகம், காதபாறை பஞ்சாயத்து அலுவலகம், ரங்கநாதன் பேட்டை பஸ் நிலையம், நெரூர் வடக்கு பஞ்சாயத்து அலுவலகம், ரெங்கநாதபுரம் பள்ளியிலும் நடக்கிறது. மேலும் வடக்கு பாளையம், குன்னனூர் ஆரம்ப சுகாதார நிலையம், உப்பிடமங்கலம் சந்தை, ஜெகதாபி சமுதாயக்கூடம், சின்ன மூக்கனாங்குறிச்சி அரசு பள்ளி, வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தாளப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம், அரவக்குறிச்சி தினசரி மார்க்கெட் ரேஷன் கடை, சீதப்பட்டி காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வேலாயுதம்பாளையம் ரவுண்டானா, சத்திரம் பஸ் நிறுத்தம், நொய்யல் பஸ் நிறுத்தம், புகலூர் நால்ரோடு, சாநகர், புதுப்பட்டி பள்ளிக்கூடம், மற்றும் ஆண்டிபட்டி பஸ் நிறுத்தம், ஈசநத்தம் பள்ளிவாசல், சின்னதாராபுரம் அக்ரஹார பகுதி, சூடாமணி மாசாணி அம்மன் கோவில், பரமத்தி பஞ்சாயத்து அலுவலகம், கூனம்பட்டி பள்ளிக்கூடம் உள்ளிட்ட இ்டங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.