நவீன செயற்கை கால், கை வழங்குவதற்கான சிறப்பு முகாம்


நவீன செயற்கை கால், கை வழங்குவதற்கான சிறப்பு முகாம்
x

ஆற்காடு, வாலாஜா தாலுகாக்களில் நவீன செயற்கை கால், கை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

ராணிப்பேட்டை

ஆற்காடு மற்றும் வாலாஜா தாலுகாக்களை் சேர்ந்த கை, கால்கள் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கால், கை வழங்குவதற்கான அளவீடு செய்யும் சிறப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. ஆற்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்று, முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம், ரேஷன் அட்டை, எக்ஸ்ரே ஆகியவற்றுடன் முப்பது வெட்டியில் உள்ள எஸ்.எஸ். திருமண மண்டபத்திற்கு காலை 9.30 மணிக்கும், வாலாஜா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மதியம் ஒரு மணிக்கும் நேரில் வந்து, வாய்ப்பினை பயன்படுத்தி நவீன செயற்கை கை மற்றும் கால் பெற்றுக்கொள்ள அளவீடு செய்து‌ கொள்ளலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story