விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்


விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள கிளாங்காட்டில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் முகுந்தாதேவி தலைமை தாங்கினார். செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், உறுப்பினர் இசக்கியம்மாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் மகேஸ்வரி தலைமையில் மருத்துவர் சிவகுமார் குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி இடுதல், சத்துமாவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் உதவி ஆய்வாளர் அபேல் ராஜ், உதவி வேளாண்மை அலுவலர் இப்ராகிம்பாஷா, செங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன், செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ஹவ்வாஷகிரா, ஊராட்சி மன்ற செயலாளர் திருமலைகுமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரவீன்குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் இசைவாணி, முருகன், ஸ்டாலின் ராஜ், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் தென்காசி மாவட்ட ஆலோசகர் வெங்கடசுப்பிரமணியம் ஆகியோர் பேசினர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கிள்ளிகுளம் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினர். வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கிளாங்காடு மற்றும் வயல்காட்டு காலனி விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட மேலாளர் செல்வகுமார், உதவி வேளாண்மை அலுவலர் சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story