மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
அறந்தாங்கி தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோட்டாட்சியர் சொர்ணராஜ் தலைமை தாங்கினார். முகாமில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களுக்கு தேவையான அடையாள அட்டை மற்றும் யு.ஐ.டி. கார்டுடன் மனுக்களும் பதிவு செய்யப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது. முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் அறந்தாங்கி பரணி, ஆவுடையார்கோவில் கவிதா, மணமேல்குடி நாகநாதன் மற்றும் அறந்தாங்கி துணை தாசில்தார் பாலமுருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story