விழுப்புரம் அருகே மலட்டாறு வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியது 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு


விழுப்புரம் அருகே  மலட்டாறு வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியது  20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
x

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்


தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் உச்ச நீர்மட்டமான 119 அடியில் 117 அடியை தண்ணீர் எட்டியுள்ளதை அடுத்து, அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விழுப்புரம் மாவட்டம் வழியாக ஓடும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 7200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

போக்குவரத்து தடை

இதில், விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் இருந்து மலட்டாறு பிரிந்து செல்கிறது. இந்த ஆற்றிலும் நீர் வரத்து அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், விழுப்புரம் அருகே பில்லூரில் இருந்து சேர்ந்தனூருக்கு செல்லும் விதமாக மலட்டாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. 2 அ டி உயரத்துக்கு மேல் தண்ணீர் செல்வதால், போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதனால், 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அத்தியாவசிய தேவைக்காகவும், வேலைக்கு செல்லவும் சுமார் 10 கி.மீ. தூரம் சுற்றி விழுப்புரம் வந்து அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்கள். முன்னதாக தரைப்பாலம் பகுதியில் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story