ஸ்ரீராமு கல்லூரியில் மண் சேகரிப்பு


ஸ்ரீராமு கல்லூரியில் மண் சேகரிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2023 12:30 AM IST (Updated: 21 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ராணுவ வீரர்கள் நினைவு கட்டிடம் கட்ட ஸ்ரீராமு கல்லூரியில் மண் சேகரிப்பு நடைபெற்றது.

கோயம்புத்தூர்


மத்திய அரசின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா சார்பில் ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் டெல்லியில் நினைவு கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்த இடம், ராணுவ பயிற்சி அளிக்கும் இடம், ராணுவ பள்ளிகள், ராணுவ படிப்பு கற்று கொடுக்கும் கல்லூரிகள் ஆகியவற்றில் இருந்து மண் சேகரிக்கப்படுகிறது. அந்த வகையில் பொள்ளாச்சியை அடுத்த நா.மூ.சுங்கத்தில் உள்ள ஸ்ரீ ராமு கல்லூரியில் மண் சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் கோவை மாவட்ட ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டு மண் சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் நித்தியானந்தம், முதல்வர், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story